சிவயோகம்

"உயிர் நோக்கிய பயணம்"

சிவ யோகம் மூலம் உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்.

உடல் நலம், உள் வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வான வாழ்வை நோக்கி உங்களை வழிநடத்தும் சிவயோகப் பயிற்சிகளில் இணையுங்கள்.

சிவயோகம் என்றால் என்ன?

சிவபெருமானின் ஐந்து முகங்களிலிருந்து வெளிப்பட்ட மெய்ஞானத்தின் உயிருள்ள வடிவமே சிவயோகம். உலகில் இன்று காணப்படும் அனைத்து யோகப் பாதைகளின் மூலாதாரமாக இதுவே விளங்குகிறது. சிவ ஆகமங்கள் என அறியப்படும் சிவயோகம், நான்கு படிநிலைப் பாதங்களாக வெளிப்படுகிறது.

  • சரியை பாதம் – தன்னலமற்ற சேவையின் பாதை (கர்ம யோகம்)
  • கிரியா பாதம் – பக்தி, பூஜை, அர்ப்பணிப்பின் பாதை (பக்தி யோகம்)
  • யோக பாதம் – உயிர் சக்தியை விழிப்படையச் செய்யும் பாதை (கிரியா யோகம்)
  • ஞான பாதம் – சுய விசாரணை மற்றும் மெய்ஞானத்தின் பாதை (ஞான யோகம்)

சிவபெருமான் இந்த மெய்ஞானத்தை வெறும் கோட்பாடாக வழங்கவில்லை; முக்தி நிலையான சிவத்தன்மையை உணர மனிதனுக்கு வழிகாட்டும் வரைபடமாக இதை அருளினார்.

குரு தில்லை அழகன், ஆகமங்களின் ஆழமான ஞானத்தை சிவயோகத்தின் மூலம் இன்றைய ஆன்மீகத் தேடலில் உள்ளவர்களுக்கு வாழ்வியல் அனுபவமாக அளிக்கிறார். இது வெறும் தத்துவம் அல்ல; தனிமனித விழிப்புணர்வை சதாசிவ பரம்பொருளுடன் ஒன்றிணைத்து, தன் இருப்பின் மூலத்தை உணரச் செய்யும் பாதையே சிவயோகம்.

அனைத்து யோகப் பாதைகளுக்கும் மூலாதாரம் சிவயோகம்

இன்று உலகில் இருக்கும் அனைத்து யோகப் பாதைகளும்—பழமையான மரபுகள் முதல் நவீன அணுகுமுறைகள் வரை சிவயோகம் எனும் ஆதிமூல மெய்ஞானத்திலிருந்து வெளிப்பட்ட கிளைகளே ஆகும்.

திருமூலர், அகத்தியர், சிவவாக்கியர், பதஞ்சலி, ஆதி சங்கராச்சாரியார், இராமலிங்க வள்ளலார், மகாவீரர், கௌதம புத்தர், மற்றும் எண்ணற்ற சித்தர்கள் இந்த நித்திய மெய்ஞானத்தை அந்தந்த காலத்திற்கும் மக்களுக்கும் ஏற்றவாறு பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தினர். போதிக்கும் முறை வேறுபட்டாலும், அதன் ஆதிமூல நோக்கம் ஒன்றே:

ஒரு மனிதனை இறைநிலையை உணரச் செய்வதே.

அனைத்து யோகப் பாதைகளுக்கும் மூலாதாரம் சிவயோகம்

உங்கள் இயல்பான தன்மையைப் புரிந்து கொள்ளுதல்

ஒவ்வொரு மனிதனும் இறைவனின் தனித்துவமான வெளிப்பாடு. மனித இயல்பு நான்கு அடிப்படைத் தன்மைகளால் இயங்குகிறது:

  • உடல்
  • உணர்ச்சி
  • உயிர் சக்தி
  • மனம்

இந்த நான்கு தன்மைகளும் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்தாலும், அதில் ஏதாவது ஒரு தன்மை மேலோங்கி அவர்களின் வாழ்க்கை அணுகுமுறையையும் ஆன்மீகத் தேடலையும் தீர்மானிக்கிறது. ஒருவரின் மேலோங்கிய இயல்பை அடிப்படையாகக் கொண்டு ஒரு யோகப் பாதை முதன்மை பெறுகிறது; மற்ற மூன்றும் அதன் வளர்ச்சிக்குத் துணையாக நிற்கின்றன.

உடல் சார்ந்தவர்கள் - உடல் ரீதியான செயல்பாடுகளை இவர்கள் இயல்பாகவும் எளிதாகவும் செய்வார்கள்; உடலே இவர்களின் மிகச் சிறந்த கருவியாக அமையும்.

உணர்ச்சி சார்ந்தவர்கள் - உணர்ச்சி மிக்கவர்களாக இருப்பார்கள்; இவர்கள் பகுத்தறிவை விட உணர்வின் அடிப்படையில் முடிவெடுப்பார்கள்.

உயிர் சக்தி சார்ந்தவர்கள் - நுட்பமான உயிர் சக்தி அதிர்வுகளை எளிதில் உணர்வார்கள்; இவர்கள் வாழ்க்கையில் பகுத்தறிவையும் உணர்ச்சியையும் விட சக்தியை மையமாகக் கொண்டு செயல்படுவார்கள்.

மனம் சார்ந்தவர்கள் - தெளிவு, பகுத்தறிவு மற்றும் உண்மையை அறியும் ஆழ்ந்த தாகம் இவர்களிடம் மேலோங்கி இருக்கும்.

இந்த இயல்புகளே யோகத்தின் நான்கு பாதைகளான கர்மம், பக்தி, கிரியா, ஞானம் என வெளிப்படுகின்றன.

சிவயோக தீட்சை

குரு தில்லை அழகன், ஆன்மீகத் தேடலில் உள்ளவர்களுக்கு அவரவர் தன்மைக்கேற்ற யோகப் பயிற்சியை சிவயோக தீட்சை மூலம் அளிக்கிறார்.

ஒருவரின் மேலோங்கிய தன்மையை அவர் நுட்பமாக அறிந்து, அதையே உள் மாற்றத்திற்கான முதன்மைக் கருவியாகப் பயன்படுத்துகிறார். அதே சமயம், மற்ற தன்மைகளையும் மேலோங்கிய தன்மைக்கு துணையாக ஒருங்கிணைக்கிறார்.

செயலில் உந்தப்படுபவர்களுக்கு

அவர் கர்ம யோகப் பயிற்சியை வழங்குகிறார். செயல் தன்னலமற்ற சேவையாக மாறுகிறது. அதற்கு பக்தி, உயிர் சக்தி, ஞானம் ஆகியவை உறுதுணையாக அமைகின்றன.

உணர்ச்சியில் ஆழ்ந்தவர்களுக்கு

அவர் பக்தி யோகப் பயிற்சியை வழங்குகிறார். அதன் மூலம் இதயம் திறந்து, பக்தி மலர்கிறது. அன்பே வழிகாட்டும் சக்தியாக மாற, செயல், உயிர் சக்தி, ஞானத் தெளிவு ஆகியவை அதன் பின்னால் இயங்குகின்றன.

உயிர் சக்தியை நுட்பமாக உணர்பவர்களுக்கு

அவர் கிரியா யோகப் பயிற்சியை வழங்கி, வாழ்வின் நுட்பமான பரிமாணங்களைத் திறக்கிறார். உயிர் சக்தி விழிப்படைகிறது; அது அன்பு, தெளிவு, தன்னலமற்ற சேவை ஆகியவற்றில் நிலைபெறுகிறது.

அறிவால் வழிநடத்தப்படுபவர்களுக்கு

அவர் ஞான யோகப் பயிற்சியை வழங்குகிறார். மெய்ஞானத்தின் மூலம் உண்மை வெளிப்படுகிறது. ஞானம் முக்திக்கான வாசலாக மாற, பக்தி, செயல், உயிர் சக்தி ஆகியவை அதன் இறக்கைகளாக அமைகின்றன.

மேலோங்கிய தன்மை முன்னின்று வழிநடத்தினாலும், மற்ற தன்மைகளும் அதனுடன் இணைந்து இறை உணர்வை நோக்கி அழைத்துச் செல்கின்றன. இந்த தீட்சை ஒரு பாதையை திணிப்பதில்லை; ஒருவரின் இயல்பான தன்மைகளை உள்ளிருந்து விழிப்படையச் செய்கிறது.

தன்னை அறிவதே துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி

மனிதன் அனுபவிக்கும் துன்பங்களின் மூல காரணம் ஒன்றே — தன்னைப் பற்றிய அடிப்படை அறியாமை.

இந்த அஞ்ஞானம் கரையும் போது, மனிதன் தன் இருப்பின் மூலத்தை உணர்ந்து துன்பங்களை முழுமையாகக் கடந்து செல்கிறான்.

குருவின் அருளால், உடல், உணர்ச்சி, உயிர்சக்தி, மனம் ஆகிய அனைத்தும் இறை உணர்வை அடையும் வாசல்களாக மாறுகின்றன.

இந்த மெய்யுணர்வின் மூலம், ஆன்மீகத் தேடலில் உள்ளவர் காலத்தைத் தாண்டிய நித்திய உண்மையை உணர்கிறார்.

நாங்கள் வழங்கும் சிவ யோகப் பயிற்சிகள்.

ஒவ்வொருவரின் தனித்தன்மைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட சிவயோகப் பயிற்சிகள், உங்களை உள்நோக்கி அழைத்துச் சென்று, உங்களின் உண்மையான இயல்பை உணரவும், வாழ்வை முழுமையாக மலரச் செய்யவும் வழிகாட்டுகின்றன.

© ஸ்ரீ தில்லை அழகன் அறக்கட்டளை 2026. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.